20 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலி: காஸாவின் தற்போதைய நிலை என்ன?
11 வாரங்களாகத் தொடர்ந்துவரும் போரில் 85 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். காஸாவின் பகுதி மக்கள் தொகை 5 லட்சம் பேர் பசியால் வாடுவதாக ஐநா தெரிவித்துள்ளது.


பாலஸ்தீனர்கள் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கு நெருக்கமான எண்ணிக்கை இது.
11 வாரங்களாகத் தொடர்ந்துவரும் போரில் 85 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். காஸாவின் பகுதி மக்கள் தொகை- 5 லட்சம் பேர் பசியால் வாடுவதாக ஐநா தெரிவித்துள்ளது.
அக்.7 ஹமாஸின் அத்துமீறலைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸா மீது நடத்திவரும் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் வாழ்வாதார உதவிகள் தடையின்றி கிடைக்கக் கோரும் ஐநாவின் தீர்மானத்தில் வாக்களிக்காமல் அமெரிக்கா தாமதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காஸாவின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸ் பகுதிக்கு கூடுதல் படைகளை இஸ்ரேல் அனுப்பியுள்ளது.
காஸாவில் நகர்கிற பொருள் எதையும் இஸ்ரேல் தாக்கி அழிப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், துண்டிக்கப்பட்டு இருந்த தொலைபேசி சேவைகள் 35 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

ராபா எல்லையில் இலவச உணவுக்காக முந்தும் பாலஸ்தீனர்கள் | AP
இதையும் படிக்க: கல்லூரியில் துப்பாக்கிச்சூடு: 10 பேரைக் கொன்ற மாணவன்!
தொடர்ச்சியான தொலைதொடர்பு துண்டிப்புகள், வாழ்வாதார உதவிகள் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுத்துவதாகக் களப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கையான இந்தப் பஞ்சம், பல லட்சம் மக்களின் வாழ்வைக் கேள்விகுறிக்குள்ளாக்கியதாக ஐநா உள்ளிட்ட அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
ஐநா உலக உணவுத் திட்டத்தின் தலைமை பொருளியல் அறிஞர் ஆரிப் ஹுசைன், “இதனை விட மோசமாக எதுவும் நடக்காது. காஸாவில் இந்த அளவில் இந்த வேகத்தில் இப்படி ஒன்று நடந்து நான் பார்த்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

நண்பரை இழந்த சோகத்தில் பாலஸ்தீன இளைஞர்கள் | AP
காஸாவின் 36 மருத்துவமனைகளில் 9 மட்டுமே இயங்குகிற நிலைமையில் உள்ளது. அவற்றிலும் போதிய மருந்து பொருள்கள், உபகரணங்கள், மருத்துவர்கள் இல்லை.
இதையும் படிக்க: செய்யறிவு பயன்படுத்தும் சாண்டா: பின்தொடரும் ராணுவம்!
வடக்கில் செயல்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் சோதனை மேற்கொள்வதொடு அங்கிருக்கிற பணியாளர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதும் அடிக்கடி நடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...