ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ஆப்கனில் 6ம் வகுப்போடு பள்ளிக்கு விடைகொடுக்கும் சிறுமிகள் கண்ணீர்

ஆப்கனில், றாம் வகுப்புப் படித்து வரும் சிறுமிகள், இதோடு, தாங்கள் பள்ளிக்குத் திரும்பப்போவதில்லை என்று நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

News image

ஆப்கன் கல்வி நிலையம் | ஏபி

Updated On :25 டிசம்பர் 2023, 9:43 am

காபூல்: ஆப்கனில், ஆளும் தலிபான்களின் ஆட்சியால், ஆறாம் வகுப்புப் படித்து வரும் சிறுமிகள், இதோடு, தாங்கள் பள்ளிக்குத் திரும்பப்போவதில்லை என்று நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

டிசம்பர் மாதத்தோடு, பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்பட்டு, விடுமுறை அளிக்கப்படும் என்பதால், காபூலில் உள்ள பிபி ரஸியா பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த பஹாரா ருஸ்தம் (13), தனது பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கூறுகிறார். இனி ஒருபோதும் அவர் தனது வகுப்பறைக்குத் திரும்பப்போவதில்லை என்பதை நினைத்துக் குமுறுகிறார்.

2021ஆம் ஆண்டு ஆப்கானிலிருந்து அமெரிக்க மற்றும் நாட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்டதற்குப் பிறகு தலிபான்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் தலிபான்களின் விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனால், ஆறாம் வகுப்புக்குப் பிறகு மாணவிகள் பள்ளிச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இது குறித்து குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதர் ரோஸா ஒதுன்பயேவா தனது கவலையையும், அதிருப்தியையும் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், மதரசாக்கள் போன்ற மதப் பள்ளிகளில் பெண்கள் படிக்க தடையில்லை என்று ஆப்கன் கல்வித் துஐற அமைச்சகம் அறிவித்திருந்தது. ஆனால் அவற்றில் நவீன பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாங்கள் அனைவரும் ஆறாம் வகுப்பு முடித்துவிட்டோம். அடுத்து ஏழாம் வகுப்பு போக வேண்டும். ஆனால், அது முடியாது. எங்கள் வகுப்பில் பயிலும் சிறுமிகள் அனைவரும் கதறி அழுகிறார்கள். 
இதுபோலவே, மற்றொரு மாணவி, தங்கள் கனவுகள் எல்லாம் இல்லாமல் போய்விட்டது. இனி நாங்கள் எப்போதுமே சொந்தக் காலில் நிற்க முடியாது. எனக்கு ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், இப்போது என்னால் படிக்கவே முடியாது. பள்ளிக்கே செல்ல முடியாது என்ற நிலை என்று சொல்லி கண்ணீர் விடுகிறார்.

ஆப்கனில், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது, ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையே புரட்டிப்போட்டுவிடும் என்று பல்வேறு துறை சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.