அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருக்கு ஜில் பைடன் உதட்டில் முத்தம் கொடுத்தது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவின் கேபிடோல் நகரில் நாடாளுமன்றக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றினார். கரோனா தொற்றுக் காலத்திலும் அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க நாடாளுமன்ற சபையில் பெரும்பான்மையை கொண்டுவந்த பிறகு ஜோ பைடன் நேற்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாப்புக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த புகைப்படம் மற்றும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருவதுடன் நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.