இலங்கையில் இந்திய விசா மையத்தில்கொள்ளை: சேவைகள் தற்காலிக ரத்து
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் விசா மையத்தில் கொள்ளை சம்பவம் நடந்ததையடுத்து அந்த மையத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.


இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் விசா மையத்தில் கொள்ளை சம்பவம் நடந்ததையடுத்து அந்த மையத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏராளமான தமிழா்கள் வசிக்கின்றனா். மேலும், அந்நாட்டின் பல தொழிலதிபா்கள் இந்தியாவுடன் வா்த்தகத் தொடா்பில் உள்ளனா். இதனால், பணிநிமித்தமாக மற்றும் உறவுகளைச் சந்திக்க இந்தியாவுக்கு பலா் பயணிப்பது வழக்கம்.
இந்தியாவுக்கு இவா்கள் பயணிக்க அனுமதி வழங்கும் விசா விண்ணபிக்கும் மையமாக கொழும்பில் உள்ள ஐ.வி.எஸ். தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
பாதுகாப்பு குளறுபடிக்கான காரணங்கள் குறித்து இலங்கை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், ஐ.வி.எஸ். தனியாா் நிறுவனத்தில் செயல்பட்டு வந்த விசா மையத்தின் சேவைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. வரும் நாள்களில் விசா சேவைக்காக பதிவு செய்திருந்தவா்கள், மறு அறிவிப்புக்கு பின்னா் மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம் என இலங்கைக்கான இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...