துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த கொடூரமான சம்பவத்துக்கு இடையிலும் சில ஆச்சரியமான நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6-ஆம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம். பல நாள்களாக இடிபாடுகளுக்கு இடையில் இருந்தும் உயிருடன் சிலர் மீட்கப்பட்டு வருவது அதிர்ச்சியாகத்தான் உள்ளது.
பூகம்பம் நிகழ்ந்து 128 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரும் உயிருடன் இருந்த 2 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. சமீபத்தில் 74 வயது மூதாட்டி ஒருவரும் அதன் தொடர்ச்சியாக 46 வயது பெண் ஒருவரும் மீட்கப்பட்டார்.
இப்போது அன்டக்யாவில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு இடையே 9 நாள்களுக்குப் பிறகு தாய் மற்றும் இரு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
எலா என்ற பெண்ணும் மெய்சம், அலி என்ற அவரது இரு குழந்தைகளும் மீட்கப்பட்ட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. சரியாக 228 மணி நேரம் தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி தன் உயிரையும் தக்கவைத்துள்ளார் எலா. மிகவும் நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!

போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!

30 மணி நேர பேட்டரி திறன்! மார்ச் 19-ல் அறிமுகமாகிறது ரியல்மி பி4 லைட்!

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

