நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை கைவிட்டது துருக்கி

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்த நிலையில், மீட்புப் பணிகள் கைவிடப்பட்டன.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை கைவிட்டது துருக்கி

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்த நிலையில், மீட்புப் பணிகள் கைவிடப்பட்டன.

நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டநிலையில், இதற்கு மேல் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருதி மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

துருக்கியில் நிலநடுக்கத்தால் சரிந்துவிழுந்திருக்கும் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியை திங்கள்கிழமை தொடங்கியிருக்கும் மீட்புப் படையினர், நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 2 வாரங்களுக்குப் பின் மீட்புப் பணியை நிறுத்திக்கொண்டுள்ளது.

துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மைக் குழு கூறுகையில், கிரேன்கள், டிரக்குகள், தொழிற்சாலை கருவிகள் பலவும் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தற்போதைய பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் சுமார் 3,85,000 குடியிருப்புகள் இடித்துத் தள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது.

அதில் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியிலும் சிரியாவின் வடக்குப் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 46,450-ஆக உயா்ந்துள்ளது.

துருக்கியில் 40,640 பேரும், சிரியாவில் 5,810 பேரும் நிலநடுக்கத்துக்கு பலியாகியுள்ளனா்; இரு நாடுகளிலும் சுமாா் 122,500 போ் காயமடைந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com