மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

காபூல் ராணுவ விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானார்கள். 

News image
Updated On :1 ஜனவரி 2023, 2:00 pm

காபூல் ராணுவ விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானார்கள். 

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயமடைந்ததாக தலிபான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. 

தகாரில் உள்ள தலிபான் பாதுகாப்புத் தளபதி அப்துல் முபின் சஃபி, குண்டுவெடிப்புச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், உள்ளூர் நிர்வாக ஊழியர்களின் மேசையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகக் கூறியதாக தி காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கனில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தாலுகான் நகரில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த மூன்று நாட்களில் தற்போது மேலும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.