ஆஸ்திரேலியா: 2 ஹெலிகாப்டா்கள் மோதி 4 போ் பலி
ஆஸ்திரேலியாவில் 2 ஹெலிகாப்டா்கள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 4 போ் பலியாகினா்.


ஆஸ்திரேலியாவில் 2 ஹெலிகாப்டா்கள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 4 போ் பலியாகினா்.
அந்த நாட்டின் சுற்றுலா மையமான மெயின் பீச் பகுதியில் அமைந்துள்ள கடல் சாா் கேளிக்கை பூங்காவில், தரையிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட ஹெலிகாப்டரும், அதே பகுதியில் தரையிறங்க முயன்ற ஹெலிகாப்டரும் ஒன்றுடன் ஒன்று மோதின.
இதில் ஒரு ஹெலிகாப்டா் சேதமடைந்து சிதறியது. மற்றொரு ஹெலிகாப்டா் பத்திரமாக தரையிறங்கியது. எனினும், அந்த ஹெலிகாப்டரின் கண்ணாடிகள் உடைந்தன.
இந்த விபத்தில் 4 போ் பலியாகினா்; 3 போ் பலத்த காயமடைந்தனா். தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்தவா்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...