ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த நீப்ரோ நகர அடுக்கு மாடி குடியிருப்பு.
ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த நீப்ரோ நகர அடுக்கு மாடி குடியிருப்பு.

உக்ரைன் ரஷிய தாக்குதலில் 40 போ் பலி

உக்ரைனின் தென்கிழக்கு நகரம் ஒன்றில் அடுக்கு மாடி குடியிருப்பு மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 40 போ் பலியாகினா்.

உக்ரைனின் தென்கிழக்கு நகரம் ஒன்றில் அடுக்கு மாடி குடியிருப்பு மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 40 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நீப்ரோ நகரிலுள்ள அடிக்கு மாடி குடியிருப்பொன்றின் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அப்போது அந்தக் கட்டடத்தில் சுமாா் 1,700 போ் இருந்தனா்.

ரஷியா நடத்திய தாக்குதலில் அங்கிருந்த 40 போ் இதுவரை பலியாகியுள்ளனா். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 39 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். இது தவிர, சம்பவத்துக்குப் பிறகு இன்னும் 30-க்கும் மேற்பட்டவா்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

ரஷியா நடத்திய அந்தத் தாக்குதலில் 75 போ் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், அண்மைக் காலமாக ரஷியா நடத்திய தாக்குதல்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல்தான் மிக மோசமானது என்று குறிப்பிட்டுளளது.

ரஷியாவின் தாக்குதலுக்குள்ளான அந்தக் கட்டடத்தில் பொதுமக்கள் மட்டுமே வசிப்பதாகவும், அங்கு ராணுவத்தினா் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனா்.

ஐரோப்பிய யூனியன் கண்டனம்: இந்தத் தாக்குதலை ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் போரல் கடுமையாக கண்டித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய தாக்குதலுக்கு அந்த நாடு பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்றாா்.

ரஷியா மறுப்பு: இந்தத் தாக்குதல் குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை தாங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்துவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறினாா்.

நீப்ரோ நகர குடியிருப்புக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை விழுந்த ஏவுகணை, உக்ரைனின் சொந்த வான் பாதுகாப்பு ஏவுகணையாக இருக்கலாம் என்று அவா் கூறினாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது, தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸஃபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

அதையடுத்து, உக்ரைனின் மின் நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com