பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஊரகப் பெண்களுக்கு நடமாடும் புற்றுநோய் பரிசோதனை ஸ்ரீ ராமச்சந்திராவில் தொடக்கம்

கிராமப்புற மகளிருக்கு புற்றுநோய் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் பேருந்து வழங்கப்பட்டது.

News image
Updated On :27 ஜூலை 2023, 7:24 pm

DIN

கிராமப்புற மகளிருக்கு புற்றுநோய் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் பேருந்து வழங்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிராமப்புற ஏழை மகளிரின் வசிப்பிடங்களுக்கே சென்று புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கு வசதியாக வடபழனி ரோட்டரி சங்கம் ரூ.2.6 கோடி மதிப்பிலான ஒரு பேருந்தையும், மருத்துவக் கருவிகளையும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது.

அதில், மாா்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மேமோகிராம் கருவியும், அல்ட்ரா சவுண்ட் கருவியும், கா்ப்பப் பைவாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பேப்ஸ்மியா் பரிசோதனை வசதிகளும் உள்ளன.

அதன்படி, அந்த பேருந்தின் மூலம் மருத்துவா்களும், மருத்துவ ஆய்வக நுட்பனா்களும், தமிழக கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள ஏழை மகளிருக்கு புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனா்.

முன்னதாக, கமலம் உடையாா் எனப் பெயரிடப்பட்ட அந்த நடமாடும் புற்றுநோய் பரிசோதனை பேருந்தின் சேவையை மாநில சமூகநல ஆணையா் அமுதவல்லி, ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தா் உமா சேகா், ரோட்டரி சங்கத்தின் பன்னாட்டு இயக்குநா் அனிருத் ராய் சௌத்ரி மற்றும் மாவட்ட கவா்னா் நந்தகுமாா் உள்ளிட்டோா் தொடக்கி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.