ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி
ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள்.


ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள்.
ஹண்டர் ஒயின் பகுதியில் சுமார் 50 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் இதில் 10 பேர் பலியானார்கள். மேலும் விபத்தில் காயமடைந்த 11 பேர் ஹெலிகாப்டர் மற்றும் வாகனம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கிரேட்டா நகரில் இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...