வங்கதேசத்தில் 7 அடுக்கு கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: பழைய டாக்காவில் மக்கள் நெரிசல் அதிகம் மிக்க குலிஸ்தான் பகுதியில் 7 அடுக்கு கட்டடம் அமைந்துள்ளது. அந்தக் கட்டடத்தில் பெரும்பாலும் அலுவலகங்களும் கடைகள், கிடங்குகள் போன்றவைகளும் உள்ளன. அங்கு மாலை 4.50 மணிக்கு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 16 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தீயணைப்புப் படையினா் அச்சம் தெரிவித்தனா்.
இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. எனினும், அந்தக் கட்டடத்தில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கட்டடத்தில் பல கிடங்குகளில் கழிப்பறை சுத்திகரிப்புப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்

ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் கைது
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


