பணியாளர்களின் நல்வாழ்வு: சர்வதேச ஆய்வில் இந்தியாவுக்கான இடம்?

பணியாளர்களின் நல்வாழ்வு ஆய்வில் 30 நாடுகளின் பணியாளர்களிடம் தரவுகள் திரட்டப்பட்டிருக்கின்றன. 
பணியாளர்களின் நல்வாழ்வு: சர்வதேச ஆய்வில் இந்தியாவுக்கான இடம்?

உலகம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களின் நல்வாழ்வைக் கணக்கிட மெக்கின்ஸி மருத்துவ கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 30 நாடுகளில் பணியாற்றும் 30,000 ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

துருக்கி, 78 சதவீதம் பெற்று முதலிடத்திலும் இந்தியா 76 சதவீத அளவில் இரண்டாம் இடத்திலும் சீனா 75 சதவீதத்தோடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.

ஜப்பான் 25 சதவீதம் பெற்று கடைசி இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதுக்குமான உறுதியான வேலை, வேலை பாதுகாப்பு உள்ளிட்டவை ஜப்பானில் இருப்பினும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் வேலை பிடிக்காத சூழலில் வேறு வேலைக்கு மாற இயலவில்லை என்பதால் ஜப்பான் பின்னடைவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

பணியாளர்களின் உடல், மனம், சமூக மற்றும் ஆன்ம நலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நேர்மறையான வேலை அனுபவம் உள்ள இடங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆரோக்கியத்தோடும் வேலையில் உற்சாகத்தோடும் இருக்க முடிவதாகத் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com