வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மூளையைத் தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் பலி - பாகிஸ்தான்

கராச்சியில் 'நாகிலேரியா பிபுலாரி' எனும் அமீபா தாக்கியதில் மேலும் ஒருவர் இறப்பு. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. 

News image
Updated On :5 நவம்பர் 2023, 11:56 am

DIN

பாகிஸ்தான் கராச்சியில் 'மூளையைத் தின்னும் அமீபா' என்றழைக்கப்படும் 'நாகிலேரியா ஃபோலேரி' (Naegleria fowleri) அமீபா, மேலும் ஒருவது உயிரைப் பறித்தது என சிந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இறந்த நோயாளி காய்ச்சல் மற்றும் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் மொத்தம் 3 பேர் இந்த அமீபாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த சிந்து மாகாணத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.


இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைந்து மூளைத்திசுக்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் மத்திய நரம்பு மண்டலத்தில் தொற்றினை ஏற்படுத்தி உயிரைக்கொள்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சிந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர்.சாத் காலித், நன்னீர் ஆகாரங்களில் காணப்படும் இந்த அமீபாவிடமிருந்து தங்களைக் காக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமீபாவால் தாக்கப்படுவது அரிது என்றாலும் இது எளிதில் உயிரைப் பறிக்கக்கூடியது என்பதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அனையவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மக்கள் சுத்தம் செய்யப்படாத, ஒழுங்காக குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மூக்கிற்குள் தண்ணீர் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் எனவும் அறிவுரை செய்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.