காஸா: மயக்க மருந்து இல்லாமல் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை!

காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
காஸா: மயக்க மருந்து இல்லாமல் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை!

காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமின்றி மூளை அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து கொடுக்காமல், வெறும் நீரைக் கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றன. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு மாதமாக போர் நீடித்து வருகிறது. அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள்.

கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. 

இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேசிய தெர்-அல்-பல்ஹா பகுதியிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனை தலைமை மருத்துவர், காஸா மருத்துவமனைகளில் இதுவரை கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த அளவு கூட்டத்தை இதற்கு முன்பு மருத்துவமனையில் கண்டதில்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மருத்துவர்கள் சோர்வடைந்துவிட்டோம். வாரம் முழுக்கவும் மருத்துவர்கள் தொடர்ந்து பணிபுரிகிறோம். சில மருத்துவர்கள் தாக்குதலில் பலியாகியுள்ளனர். சில மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை மருத்துவமனைக்கு கொண்டுவந்துவிட்டனர். 

காஸா எல்லையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவைத்துள்ளது. மின்சாரம் கூட இல்லாமல் சில வாரங்களுக்கு எரிபொருள் கொண்டு சிகிச்சை அளித்தோம். 

சில இடங்களில் மயக்க மருந்துகள் இருப்பு இல்லை. அதனால், மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. கிருமிநாசினி இல்லாமல் வெறும் நீரில் காயங்களைத் துடைக்கிறோம். ஒருசில மருத்துவமனைகளில் காயங்களைத் துடைப்பதற்கு சுத்தமான நீர் கூட இல்லை. மருத்துவமனைகளில் குவியும் பொதுமக்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்களும், செவிலியர்களும் திணருகிறோம் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com