பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமான போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர்ந்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலுடனான தனது உறவை முடிவு செய்ய இஸ்ரேலில் இருந்த ஒட்டுமொத்தத் தூதர அதிகாரிகளையும் திரும்ப பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அமைதியை உருவாக்கும் நிலைப்பாடு கொண்டுள்ள நாடு, தென்னாப்பிரிக்கா.
தூதர்களைத் திரும்ப பெறுவது வழக்கமான நடவடிக்கைதான். இஸ்ரேலுடனான உறவைத் தொடர்வது என்பது எல்லா விதங்களிலும் சாத்தியமா என்பது குறித்து முடிவு செய்ய அவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர் நலேதி பந்தோர்.
.jpg)
தென்னாப்பிரிக்க பாலஸ்தீன ஆதரவாளர்கள்
தென்னாப்பிரிக்கா இஸ்ரேல் நாட்டில் தூதர் யாரையும் கொண்டிருக்கவில்லை. நாடு முழுவதும் பணியாற்றிய தூதரக அதிகாரிகளே தற்போது திரும்பப் பெறப்பட்டு உள்ளனர்.
மேலும், “குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் கொல்வது குறித்து நாங்கள் மிகவும் கவலையுறுகிறோம். இஸ்ரேலின் பதிலளிக்கும் இயல்பு என்பதை கூட்டு தண்டனையாகத் தான் பார்க்க முடிகிறது. முழுமையான போர் நிறுத்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என அவர் தெரிவ்த்துள்ளார்.
இதையும் படிக்க: வடக்கு காஸாவை முடக்கியது இஸ்ரேல்!
“தென்னாப்பிரிக்கா தனது ஒட்டுமொத்த தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றது என்பது பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி” என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அக்.7 -ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் தொடர்ந்து வரும் போர் 32-வது நாளாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


