42 வயது மனிதரைக் காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்!

பிரிட்டனில் நடைபயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்ட 42 வயது மனிதரைக் காக்க ஸ்மார்ட் வாட்ச் உதவியுள்ளது.
42 வயது மனிதரைக் காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்!

பிரிட்டன்: 42 வயதான பால் வபாம், வேல்ஸ் ஹாக்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் அதிகாலை நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு நிலைகுலைந்துள்ளார்.

இந்த நிலையில் தனது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் வழியாக மனைவியை அழைக்க முடிந்தது. 5 நிமிட தூரத்தில் இருந்த அவர் மனைவி அந்த இடத்திற்கு வரவே அவரை மருத்துவமனை கூட்டிச் சென்றுள்ளார்.

மருத்துவர்களால் சோதிக்கப்பட்ட பால், அவரது தமனியில் ஏற்பட்ட அடைப்பால் நிலைகுலைய வேண்டிய சூழல் உருவானதாகத் தெரிவித்தனர்.

“நான் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்டவன். அதனால் மாரடைப்பு ஏற்படாது என நினைத்திருந்தேன். எனக்கும் குடும்பத்திற்கும் இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார் பால் வபாம். 

ஸ்மார்ட் வாட்சுகள் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வசதிகளுடன் உள்ளன. ஆபத்தான சூழல்களில் மற்றவர்களைத் தொடர்பு கொள்ளவும் இவை பயன்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com