சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை, ஆனால்...: நெதன்யாகு!

காஸாவில் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பிரதமர் நெதன்யாகு இஸ்ரேலின் நோக்கத்தைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

News image
பெஞ்சமின் நெதன்யாகு
Updated On :10 நவம்பர் 2023, 8:22 am

DIN

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச ஊடகங்களிடம் பேசியபோது, காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காஸாவில் தினந்தோறும் நான்கு மணி நேரம் தாக்குதல் நிறுத்தத்தை பிரதமர் அறிவித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பேசிய நெதன்யாகு,  இஸ்ரேலிய ராணுவம் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் பாலஸ்தீனத்தை மீண்டும் கைப்பற்றும் திட்டம் இஸ்ரேலிடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

“போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு ஒப்பானது. ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கான நேர அட்டவணை கிடையாது. இஸ்ரேல் ராணுவம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. எவ்வளவு நாள் எடுக்குமோ அது வரை நாங்கள் போரிடுவோம். காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை. நாங்கள் ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கவில்லை, காஸாவுக்கும் எங்களுக்கும் சிறந்த எதிர்காலம் அமைக்கவே எதிர்பார்க்கிறோம். காஸாவில் மக்கள் அரசை வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் வெற்றிக்குப் பிறகு எப்போதும் காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் படை தயாராக இருக்கும் என்றும் அதுவே ஹமாஸ் போன்ற குழு மீண்டும் உருவாவதைத் தடுக்கும் எனவும் நெதன்யாகு குறிப்பிடுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத குழுவை அடியோடு ஒழிக்கும் முயற்சியில் உள்ள இஸ்ரேல் காஸாவில் நடத்திய வான் வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 10,800 பாலஸ்தீனர்கள் இதுவரை பலியாகியுள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.