சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸா மருத்துவமனை வாசலில் இஸ்ரேல் பீரங்கிகள்!

உணவு, தண்ணீர், மருத்துவப் பொருள்கள் எதுவுமின்றித் தவிக்கும் அல்-ஷிபா மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் பீரங்கிகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :14 நவம்பர் 2023, 8:55 am

DIN

இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் மிகுந்த பாதிப்பைச்  சந்தித்திருக்கும் அல்-ஷிபா மருத்துவனை இப்போது இஸ்ரேலின் பீரங்கிகளாலும் தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வாகனங்களாலும் சூழப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் வான்வழித் தாக்குதலால் பெரும் இழப்பினைச் சந்தித்துவரும் இந்த மருத்தவமனையில் இப்போது தண்ணீரும், மின்சாரமும், எரிபொருள்களும் மிகக்குறைவாகவே உள்ளன. சமீபமாக இந்த மருத்துவமனையின் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தகடுகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டன.

இந்த ஆபத்தான நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். உள்ளே மருத்துவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைவரும் வெளியில் நடக்கும் பயங்கரத் தாக்குதலுக்கு பயந்து வெளிவர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர். 

இந்த மருத்துவமனைக்கு போதிய மின்சாரம் கிடைக்காததால் இன்குபேட்டரில் உள்ள குழந்தைகள் இறந்துவருகின்றனர். மேலும் மருந்துப்பொருட்கள் பற்றாக்குறையால் மயக்க மருந்து இல்லாமலேயே அறுவை சிகிச்சைகள் நடைபெருகின்றன. 

இங்கு உணவு, தண்ணீர் எதுவுமே இல்லை. மக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் இந்த மருந்துவமனைக்குக் கீழே உள்ள சுரங்கத்தில்தான் மறைந்திருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. இந்த அப்பாவி மக்களை அரணாக பயன்படுத்தி ஹமாஸ் அமைப்பினர்  மறைந்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் லெர்னர் இந்த மருத்துவமனை ஹாமஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும் முடிந்த அளவில் மக்களை வெளியேற்றுவதே எங்களது திட்டமாகும் எனவும் கூறியுள்ளார். 
 
மேலும் லெர்னர், மருத்துவமனைக்குள் நூற்றுக்கனக்கான மக்கள் மட்டுமே இருக்கக்கூடும் எனக் கூறும் நிலையில், ஹமாஸ் அரசின் துணை சுகாதார அமைச்சர் யூசிப் அபு ரிஷ், இந்த மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள் எனத் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.