நமது நோக்கம் என்பது...: புதிய அமைச்சரவையை வரவேற்ற ரிஷி சுனக்!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வாராந்திர கூட்டத்தில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவை வரவேற்று பேசியுள்ளார்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் புதிய அமைச்சரவை வரவேற்று பேசியதோடு மாற்றத்திற்கான உறுதிமொழியையும் முன்வைத்துள்ளார்.

செவ்வாய்கிழமை  (நவ.13) நடந்த கூட்டத்தில் பேசிய ரிஷி சுனக், “நமது நாட்டின் வருங்காலத்தைச் சிறந்ததாக மாற்றும் நீண்ட கால முடிவுகளை மேற்கொள்வதே நமது நோக்கம். பலமான மற்றும் ஒருங்கிணைந்த அணியால் மட்டுமே எல்லோருக்குமான மாற்றத்தை உருவாக்க முடியும். ஆண்டின் தொடக்கத்தில் முன்வைத்த இலக்குகளை நோக்கி நமது முன்னேற்றம் இருக்கும் நான் நம்புகிறேன். ஆனால் அது மட்டுமே நமது இலக்கு அல்ல. நமது குழந்தைகளுக்காகவும் அவர்களின் தலைமுறைக்காகவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே நமது அணியின் நோக்கம். அது தான் நாம் செய்ய வேண்டியது. பணியைத் தொடங்குவோம்” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக உள்துறை அமைச்சராக இருந்த சூவெல்லா பிரேவர்மனை அமைச்சரவையில் இருந்து நீக்கிய ரிஷி சுனக், அந்தப் பொறுப்புக்கு ஏற்கெனவே வெளியுறவு துறை அமைச்சராக இருந்த  ஜெம்ஸ் கிளவர்லியை நியமித்தார். 

2016-ல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த டேவிட் கேமரூனை 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுறவு அமைச்சராக தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார், ரிஷி சுனக்.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு ரிஷி சுனக் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com