சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸாவை விட்டு வெளியேறுங்கள்: இஸ்ரேல் சொல்வது இதுதானா?

காஸா பகுதி முழுவதும் தனது நடவடிக்கையை விரிவுப்படுத்தவுள்ளது இஸ்ரேல்.

News image
இஸ்ரேல் டாங்கிகள்
Updated On :16 நவம்பர் 2023, 10:35 am

DIN


இஸ்ரேல் படைகள் காஸா மக்களைத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது. 

ஏற்கெனவே வடக்குப் பகுதியில் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ராணுவம், தனது நடவடிக்கைகளைத் தெற்கு நோக்கி விரிவுப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக மத்திய காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்நுழைந்த இஸ்ரேல் ராணுவம்,  ஹமாஸ் பயன்படுத்தியதாக அந்த மருத்துவமனையின் எம்.ஆர்.ஐ அறையில் இருந்து துப்பாக்கிகளையும் ஹமாஸ் சீருடைகளையும் மீட்டதாக விடியோ வெளியிட்டது.

ஆனால், இஸ்ரேல் முன்வைத்த, அல்-ஷிபா மருத்துவமனை ஹமாஸின் தலைமை கட்டுபாட்டகமாகச் செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு ஆதரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பதுங்குமிடமாகவும் எதுவும் தென்படவில்லை. 

இடிபாடுகளிடையே சிக்கியவர்களைத் தேடும் பாலஸ்தீனர்கள்

இடிபாடுகளிடையே சிக்கியவர்களைத் தேடும் பாலஸ்தீனர்கள்

இந்த நிலையில், இஸ்ரேலின் போர் விமானங்களிலிருந்து துண்டறிக்கைகள் வீசப்பட்டுள்ளன. தென்மேற்கில் உள்ள நகரமான கான் யூனிஸ் போன்ற பகுதிகளிலும் வடக்கில் ஐநா நிர்வகிக்கும் அகதிகள் முகாமிலும் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்களைத் தெற்கு நோக்கி செல்ல இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

உணவு, நீர், போதிய வாழ்வாதார பொருள்களின்றி லட்சக்கணக்கான மக்கள் ஏற்கெனவே தெற்கு நோக்கி இடம்பெயர்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் முழு காஸாவிலும் தனது நடவடிக்கைகளை விரிவுப்படுத்தவுள்ளது.

அக்.7 ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்வினையாகக் காஸாவைத் தொடங்கிய இஸ்ரேல் ஆறாவது வாரமாகத் தரைவழியிலும் வான்வழியிலும் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

இதுவரை பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதுமிருந்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அழுத்தம் இஸ்ரேலுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது.

அண்டை நாடான எகிப்து பெருமளவிலான அகதிகளை ஏற்கத் தயாராக இல்லாத நிலையில் பாலஸ்தீனர்கள் தெற்கு நோக்கி செல்லுங்கள் என்றால் எங்கு செல்வார்கள் என்பதே கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. 

இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா பாலஸ்தீனர்களை அந்த நிலத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் இஸ்ரேல், இந்த நடவடிக்கையை ஹமாஸை வேரோடு அழிக்க முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.