

முதலையின் முழு முதல் உறுப்பே இரண்டு தாடைகளும்தான். தனது இரையைத் தேடிப் பிடித்துக் கடித்துச் சாப்பிடத் தேவையான தாடைகளில் மேல்தாடையை இழந்த முதலை ஒன்று காட்டர்லேண்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நடுக்காட்டில், மேல்தாடையை இழந்த பெண் முதலை ஒன்று இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அது மீட்கப்பட்டு, ஃப்ளோரிடாவில் உள்ள காட்டர்லேண்ட் உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. நீ என்னுடைய ஊழியராக இருந்தால்.. முதல் மனைவியிடம் எலான் மஸ்க் காட்டம்
மேல்தாடை இழந்து, பயங்கர காயத்துடன் இருந்த முதலை, காட்டிலேயே இருந்தால் அது சாப்பிட முடியாமல் பலியாகும் அபாயம் இருந்ததால், உடனடியாக அது மீட்கப்பட்டு உயிரியல் பூங்காவில் விடப்பட்டது. நல்லபடியாக அதன் காயம் ஆறிவிட்ட நிலையில், பூங்கா நிர்வாகம் அளிக்கும் உணவுகளை முதலை சாப்பிடத் தொடங்கியிருக்கிறது.
தற்போதைக்கு அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
முதலையை காப்பாற்றியவர்கள், புகழ்பெற்ற டோலி பார்டனின் பிரபலமான ஜோலின் பாடலால் ஈர்க்கப்பட்டு, இந்த முதலைக்கு ஜாலீன் என பெயர்சூட்டியுள்ளனர். நாள்தோறும் இரண்டு முறை இதற்கு உணவு வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.