சிங்கப்பூரை மீண்டும் தாக்குகிறதா கரோனா அலை?

சிங்கப்பூரில் மீண்டும் கரோனா அலை வீசுகிறதோ என்று அஞ்சும் அளவுக்கு அங்கு நாள்ஒன்றுக்கு ஆயிரம் பேர் வரை கரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
சிங்கப்பூரை மீண்டும் தாக்குகிறதா கரோனா அலை?


சிங்கப்பூரில் மீண்டும் கரோனா அலை வீசுகிறதோ என்று அஞ்சும் அளவுக்கு அங்கு நாள்ஒன்றுக்கு ஆயிரம் பேர் வரை கரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

கடந்த வாரத்துக்கு முன்பு வரை, இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்தமாக 2000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நாள்தோறும் கரோனா பாதிப்பு ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதாகவு அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நுண்ணுயிரியின் உருமாறிய இஜி.5 மற்றும் அதன் திரிபான எச்கே.3 என்ற நுண்ணுயிரிகளின் தாக்கமே தற்போது புதிய கரோனா அலைக்கு காரணமாக அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் தற்போது கரோனா பாதித்திருப்பவர்களுக்கு மேற்கண்ட இரண்டு நுண்ணுயிரிகளின் தாக்கமே 75 சதவீதம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கரோனா அலை தொடங்கியிருந்தாலும், பொதுமுடக்கத்துக்கான வாய்ப்புகள் இல்லை என்றும், இதனை உள்ளூர் நோயாகக் கருதி, அதனுன் வாழப் பழகுவோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய கரோனா வைரஸ்களைக் காட்டிலும் இவை உயிருக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com