ஹமாஸ் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ச்சியாக காஸாவின் மீது வான்வழி தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், வடக்கு காஸாவில் பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 13 பேர் கடந்த 24 மணிநேரத்தில் இறந்துள்ளதாகவும் அதற்குக் காரணம் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்தான் எனவும் ஹமாஸின் அல்- கஸாம் படைப்பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏறத்தாழ 150 இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர், ஹமாஸ் பிடியில் பிணைக்கைதிகளாக உள்ளனர்.
வடக்கு காஸாவில் ஐந்து வெவ்வேறு இடங்களில் இவர்களை சிறை வைத்திருந்ததாகவும் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு இவர்கள் பலியானதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
24 லட்சம் மக்கள்தொகை கொண்ட காஸா பகுதியை வான்வழியாகவும் பீரங்கிகள் மூலமாகவும் தொடர்ந்து இஸ்ரேல் தாக்கி வருகிறது.
மேலும், குறைந்தபட்சம் 500 குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளதாக ஹமாஸின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரே ஹமாஸின் அல்- கஸாம் படைப்பிரிவு, "ஒவ்வொரு முறை முன்னறிவிப்பின்றி எங்கள் மக்களைத் தாக்கும்போதும் பிணைக் கைதிகளில் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்” என இஸ்ரேலை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


