'சொல்லமுடியாத கொடூரமான பயங்கரவாதச் செயல்' - ரிஷி சுனக்

இஸ்ரேல் மீதான தாக்குதலை 'சொல்ல முடியாத, கொடூரமான பயங்கரவாதச் செயல்' என்று கூறியுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தானும் இங்கிலாந்தும் இஸ்ரேல் மக்களுடன் நிற்பதாகத் தெரிவித்துள்ளார். 
'சொல்லமுடியாத கொடூரமான பயங்கரவாதச் செயல்' - ரிஷி சுனக்

இஸ்ரேல் மீதான தாக்குதலை 'சொல்லமுடியாத, கொடூரமான பயங்கரவாதச் செயல்' என்று கூறியுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தானும் இங்கிலாந்தும் இஸ்ரேல் மக்களுடன் நிற்பதாகத் தெரிவித்துள்ளார். 

எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது 13-வது நாளாக இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்து வருகிறது. 

இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இரு தரப்பினரின் தீவிர தாக்குதலால் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர்  ஐசக் ஹெர்சாக் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

இஸ்ரேல் டெல் அவிவ்வில் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், 'இந்த முக்கியமான நேரத்தில் நான் இஸ்ரேலில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இஸ்ரேலிய மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சொல்ல முடியாத, கொடூரமான பயங்கரவாதச் செயலுக்கு ஆளாகியுள்ளீர்கள், நானும் பிரிட்டனும் உங்களுடன் நிற்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பிரதமர் மற்றும் அதிபருடனான சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்' என்று பேசினார்.

மேலும் ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் இஸ்ரேலில் இருக்கிறேன், துக்கத்தில் ஒரு தேசம்.

நான் உங்களுடன் சேர்ந்து வருந்துகிறேன், தீவிரவாதம் என்ற தீமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன்.

இன்றும், எப்போதும்" என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று(புதன்கிழமை) இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுடன் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையின்போதுகூட காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை. இதனால் பைடனுடனான பேச்சுவார்த்தையை அரபு நாட்டுத் தலைவர்கள் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com