2ம் கட்டத் தாக்குதல்: போர் நீண்ட நாள்களுக்கு நடைபெறலாம் -இஸ்ரேல்

இஸ்ரேல் - காஸா இடையிலான போர் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 
காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவப் படை
காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவப் படை

இஸ்ரேல் - காஸா இடையிலான போர் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

விமானம் மற்றும் கடல் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழித்தாக்குதலில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. 

இதனிடையே இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் படைக்கு எதிரான போர் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இது மிகவும் சவாலானதாகவும் நீண்டதாகவும் இருக்கும். 

போரின் இரண்டாம் கட்டமாக தரைவழித்தாக்குதல் நடத்த காஸா எல்லைக்குள் இஸ்ரேல் படையினர் நுழைந்துள்ளனர். 

நாடு உயிர்த்திருப்பதற்கான போராட்டமாக இந்தப்போர் உள்ளது. தரைவழியாக நுழைந்ததன்மூலம் தாக்குதல் மிகத்தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 8,000 பேர் வரை உயிரிழந்ததாக காஸா வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் என்றும், மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதலால் 110 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com