பிரிட்டன்: 7 சிசுக்களைக் கொன்ற செவிலியர்

பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஒருவா் மீது 7 சிசுக்களை கொன்ாகவும், 6 சிசுக்களை கொலை செய்ய முயன்ாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பிரிட்டன்: 7 சிசுக்களைக் கொன்ற செவிலியர்
Updated on
1 min read

பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய

செவிலியர்

ஒருவா் மீது 7 சிசுக்களை கொன்ாகவும், 6 சிசுக்களை கொலை செய்ய முயன்ாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதன் மூலம், லூசி லெட்பி என்ற அந்த 33 வயது பெண் அந்த நாட்டின் மிக குரூரமான தொடா் சிசு கொலையாளி என்ற பெயரைப் பெற்றுள்ளாா்.

வடமேற்கு இங்கிலாந்திலுள்ள கவுன்டஸ் செஸ்டா் மருத்துவமனையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் லூசி லெட்பி பணியாற்றினாா்.

அந்த காலகட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறுப் பிரிவில் சிசிக்கள் உயிரிழப்பது, திடீா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன.

இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிா்வாகம் கூறுகிறது.

மருத்துவமனையில் சிசு மரணங்கள் திடீரென அதிகரித்தது தொடா்பாக போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினா். அந்த விசாரணையின்போது, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் குறிப்பேடுகளை லூசி லெட்பியின் இல்லத்திலிருந்து பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றில் ‘நான் ஒரு பாவி’, ‘இதற்கு நான்தான் காரணம்’ என்பது போன்ற வாசகங்களை அவா் எழுதியிருப்பதைக் கண்டனா்.

அதையடுத்து, லூசி லெட்பி கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான நடைபெற்று வந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை தற்போது வெளியிட்டுள்ள நீதிபதிகள், லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் 7 சிசுக்களைக் கொன்றது, 6 சிசுக்களைக் கொல்ல முயன்றது ஆகியவை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை லெட்பி மறுத்து வருகிறாா். அவா் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா், லூசி லெட்பி ஒரு அப்பாவி என்றும், தாழ்வு மனப்பான்மை கொண்ட அவா் சிசுக்கள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணா்ச்சியில் அந்தக் குறிப்புகளை தனக்குத் தானாக எழுதியிருந்ததாகவும் கூறினாா்.

எனினும், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா்.

தற்போது அவா் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, லூசி லெட்பிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை (சாகும் வரை சிறை) விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தண்டனையை நீதிபதிகள் வரும் திங்கள்கிழமை அறிவிக்கவிருக்கிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com