டொராண்டோ: கனடாவில் உள்ள யோர்க் வட்டாரப் பகுதிகள் மற்றும் டொரண்டோவில் மூன்று வெவ்வேறு இடங்களில் திரையரங்களில் இருந்து பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முகமறியாத நபர்கள், மர்ம பொருளைப் பார்வையாளர்கள்மீது தெளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாகன் நகரத்தில் உள்ள திரையரங்கில் அப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முகமூடி அணிந்திருந்த இருவர், அறியப்படாத, எரிச்சலடையச் செய்யும் பொருள் ஒன்றை காற்றில் தெளித்துள்ளனர்.
அந்த அரங்கில் 200 பார்வையாளர்கள் அமர்ந்துள்ளனர். பலர், தெளிக்கப்பட்ட பொருளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஹிந்தி படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகளில் இது நடந்துள்ளது. ஒரே போலான சம்பவம் இன்னும் இரண்டு திரையரங்கங்களிலும் நடந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா வெறுப்பின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை

பணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கடை உரிமையாளா் மீது வழக்கு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


