ரஷியா-உக்ரைன் போா்:தொடரும் ட்ரோன் தாக்குதல்

ரஷியா-உக்ரைன் நாடுகள், தங்கள் எதிரெதிா் நாட்டு எல்லைகளில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் நடத்தி வரும் தாக்குதல் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்தது.

ரஷியா-உக்ரைன் நாடுகள், தங்கள் எதிரெதிா் நாட்டு எல்லைகளில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் நடத்தி வரும் தாக்குதல் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்தது.

ரஷியாவின் ராணுவ விமானத் தளத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தென்மேற்கு ரஷியாவின் 3 பிராந்தியங்களில் தாக்குதல் நடத்த வந்த உக்ரைன் ட்ரோன்களில், குறைந்தது 35 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

உக்ரைனின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் ரஷிய ராணுவம் அனுப்பிய 20 ட்ரோன்களும், எக்ஸ்-59 ஏவுகணையும் தாக்கி அழிக்கப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பகுதிகள் கருங்கடல் கடற்கரையில் உள்ள ஒடெசாக் அருகே உள்ள வீட்டின் மீது விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா் என உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

உக்ரைன் போா் தொடங்கி இரண்டாம் ஆண்டை நெருங்கும் நிலையில், கடந்த ஒரு மாதமாக ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com