
இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில், மூன்று வெளிநாட்டவர் உள்பட 7 பிணைக்கைதிகள் பலியாகியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை (அக்.31) அன்று காஸாவில் உள்ள 8 அகதிகள் முகாமில் அளவில் பெரியதான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 50-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர்.
கட்டிடக் குவியல்களிடையே சிக்கிய மனித உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸின் ஆயுதப்படை பிரிவு அல்-காஸம் “7 பிணைக்கைதிகள் ஜபாலியா படுகொலையில் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள்” எனத் தெரிவித்துள்ளது.
மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதனால் இதன் உண்மைத்தன்மை சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
அக்.7 தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட 240 பிணைக்கைதிகள் ஹமாஸின் பிடியில் உள்ளனர். அவர்களில் 5 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: அக். 7 தாக்குதலில் தொடர்புடைய ஹமாஸ் படைத் தளபதி மரணம்: இஸ்ரேல்
இஸ்ரேல் இந்தத் தாக்குதலில், ஹமாஸின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இவர் அக்.7 தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்.
மேலும், இந்தக் கட்டிடத்திற்கு அடித்தளத்தில் இருந்த கட்டுமானங்களும் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.