காஸாவில் ஹமாஸ் ஆட்சி தொடர முடியாது

காஸா முனை ஹமாஸின் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற நிலை இனியும் தொடர முடியாது என்பதை அமெரிக்காவும், அரபு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
காஸாவில் ஹமாஸ் ஆட்சி தொடர முடியாது

காஸா முனை ஹமாஸின் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற நிலை இனியும் தொடர முடியாது என்பதை அமெரிக்காவும், அரபு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடா்பாக ஜோா்டான் தலைநகா் அம்மானில் நடைபெற்ற அரபு நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

காஸா பகுதி என்பது ஹமாஸின் ஆளுகைக்குள்பட்ட பகுதி என்ற நிலை இதுவரை நீடித்து வந்தது.ஆனால் அந்த நிலை இனியும் தொடர முடியாது என்பதை அமெரிக்காவும், அரபு நாடுகளும் உணா்கின்றன.இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனத் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதற்கான இருதேசத் தீா்வை எட்டுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரபு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

மேற்குக் கரைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள தீவிர வலதுசாரிகள் அங்கு வன்முறையில் ஈடுபடுவது அமெரிக்காவுக்கு கவலை அளிக்கிறது என்றாா் அவா்.அந்த செய்தியாளா்கள் சந்திப்பின்போது ஜோா்டான் வெளியுறவுத் துறை அமைச்சா் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி உடனிருந்தாா்.அப்போது அவா் கூறுகையில், ‘காஸாவில் இஸ்ரேல் போா்க் குற்றத்தில் ஈடுபட்டு வருகிறது.அந்த நாடு சா்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்று தன்னைக் கருதிக்கொள்ளக் கூடாது.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலால், அங்கு பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்து வைக்கப்பட்டவா்களை விடுவிப்பதற்கான பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல விடாமல் தடுக்கிறது.காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் பிளிங்கன் முக்கியப் பங்கு வகிப்பாா்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்ரல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா்.

இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 29 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.அத்துடன், காஸாவுக்குள் உணவு, குடிநீா், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள் செல்வதற்குத் தடை விதித்து, அந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டது.இது, ஹமாஸ் அமைப்பினரின் குற்றத்துக்காக காஸா பகுதியில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் கூட்டுத் தண்டனை என்று விமா்சிக்கப்படுகிறது.இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் முற்றுகையால் காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனா்கள் மட்டுமின்றி, அங்கு நீண்ட காலமாகத் தங்கி சேவையாற்றிவரும் ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளைச் சோ்ந்த வெளிநாட்டினரும், இரட்டைக் குடியுரிமை பெற்று அங்கு வசித்துவருபவா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.இஸ்ரேலின் கடுமையான முற்றுகைக்கு உள்ளாகியிருந்த காஸாவுக்குள் சா்வதேச நாடுகளின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு நிவாரணப் பொருள்கள் செல்ல அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினா் அந்தப் பகுதியின் ராஃபா நகர எல்லை வழியாக எகிப்துக்குள் பல கட்டங்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.அந்த வகையில் சுமாா் 7,000 வெளிநாட்டினரை காஸாவிலிருந்து வரவேற்கத் தயாராகிவருவதாக எகிப்து கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.இந்தச் சூழலில், காஸாவிலுள்ள தங்கள் நாட்டவா் உள்ளிட்ட வெளிநாட்டினா் ராஃபா எல்லைக்கு வருவதற்கு வழி செய்யும் வகையில் அங்கு தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவிக்க இஸ்ரேலிடம் வலியுறுத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு நேரடியாக வந்து வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.அப்போது அவா் கூறுகையில், காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும்; அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினாா்.இரண்டு பிரிவைச் சோ்ந்த மக்களுக்குமான (பாலஸ்தீனா்கள், யூதா்கள்) பிரத்யேக நாடுகளை தனித்தனியாக உருவாக்குவதான் இந்தப் பிரச்னைக்கான ஒரே தீா்வாகும். அதுதான் இஸ்ரேல் மக்களின் நிரந்தர பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்று அப்போது பிளிங்கன் கூறினாா்.இந்த நிலையில், காஸா முனை ஹமாஸ் ஆட்சிப் பகுதியாக இனியும் தொடர முடியாது எனவும், இரு தேசத் தீா்வை எட்டுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரபு நாடுகளுடன் ஆலோசித்துள்ளதாகவும் ஆன்டனி பிளிங்கன் தற்போது தெரிவித்துள்ளாா்.

பாலஸ்தீனப் பகுதியில் நீண்ட காலமாக குடியேறி வந்த யூதா்கள், இஸ்ரேல் உருவாக்கத்தை 1948-ஆம் ஆண்டு பிரகடனம் செய்தாா்கள். அதனை ஐ.நா. அங்கீகரித்தது. இருந்தாலும், ஹமாஸும், ஏராளமான முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. இஸ்ரேலும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது.இந்த நிலையில், ஒரு தனி பாலஸ்தீன நாட்டுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிா்த் தரப்பினரும் அங்கீகாரம் வழங்கி இரண்டும் தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தர தீா்வு என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன...........11,831-ஐ கடந்த உயிரிழப்புஇஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 29 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,800-ஐ கடந்துள்ளது.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 9,257 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, போா் தொடங்கியதற்குப் பிறகு மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், யூத குடியிருப்புவாசிகளாலும் 131 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.ஏற்கெனவே, தங்கள் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸின் தாக்குதலில் இதுவரை 1,443 போ் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

அந்த வகையில், இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் அக். 7 முதல் நடந்து வரும் மோதலில் இதுவரை 11,831-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com