
ஹமாஸ் அமைப்பினர் காஸாவில் சுமார் 120 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸாவிலிருந்து ஹமாஸ் குழுவினா், இஸ்ரேல் மீது கடந்த அக். 7ல் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினா். மேலும் இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலால் காஸா உருக்குலைந்துள்ளது.
இதையும் படிக்க | சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!
இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்களை ஹமாஸ் படையினர், பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் அமைப்பிடம் இஸ்ரேலைச் சேர்ந்த 120 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் காஸா மீது நடத்திய தாக்குதலில் பிணைக் கைதிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.