மத்திய காஸாவில் உள்ள பேப்டிஸ்ட் அரபு தேசிய மருத்துவமனையின் மீதான தாக்குதலில் 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு, இஸ்ரேலின் விமானத் தாக்குதல் தான் காரணம் என காஸாவின் அமைச்சகம் தெரிவிக்கிறது.
ஆனால், இந்த சம்பவத்துக்கு தாங்கள் காரணமில்லை என இஸ்ரேல் மறுப்பதோடு பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத குழு ஏவிய கணை, இலக்கு தவறி மருத்துவமனையைத் தாக்கியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான மருத்துவமனை பகுதிகள்
மருத்துவமனை உயிர் பலிகள்:
இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே தாக்குதலில் அதிகபட்ச உயிர் பலிகள் ஏற்பட்டிருப்பது இந்த முறை தான்.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட குறைந்தது 500 பேராவது இறந்திருக்கக்கூடும். கட்டடக் குவியலுக்குள் சிக்கியிருக்கும் நபர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கும்.
இவர்களில் பெரும்பாலனோர் இடப்பெயர்வில் தஞ்சமடைந்தவர்கள்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் மை அல்கைலா(Mai Alkaila) இந்த சம்பவத்தை படுகொலை என விமர்சிக்கிறார்.
மத்திய காஸாவில் அமைந்திருக்கும் இந்த மருத்துவமனை ஜெருசலேம் மறைமாவட்ட ஆயர் பேரவையால் நடத்தப்படுகிறது.

காயமுற்ற சிறுவன்
ஜிகாத்தின் பதில்
மருத்துவமனை தகர்ப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் குழு மறுக்கிறது.
இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு, ”இது இஸ்ரேல் நிகழ்த்திய கொடூரமான படுகொலை. இதற்கான பொறுப்பில் இருந்து தப்பிக் கொள்ள அவர்கள் புனையும் பொய்தான் எங்கள் மீது குற்றம் சுமத்துவது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளது.
ஜோ பைடனின் ஆதரவு
இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபடவில்லை. இன்னொரு அணி செய்திருக்கிறது. அமெரிக்காவின் சார்பில் இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்கப்படும் என ஜோ பைடன், நெதன்யாகு உடனான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது: இஸ்ரேலில் ஜோ பைடன்
உலக நாடுகளின் கண்டனம்
ஜோர்தானில் நடைபெறவிருந்த அரபு தலைவர்களுடனான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சந்திப்பை ரத்து செய்துள்ளது ஜோர்தான்.
இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை நாடுகள் தொடங்கி மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு எகிப்து, செளதி அரேபியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி - அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


