தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இஸ்ரேலுக்கு ராணுவ ஆலோசனை, வான் பாதுகாப்பு வழங்கும் பென்டகன்

இஸ்ரேலுக்கு இராணுவ ஆலோசகர்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பென்டகன் அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :24 அக்டோபர் 2023, 10:23 am

இஸ்ரேல் - காஸா இடையேயான போர் 18வது நாளை எட்டியிருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு இராணுவ ஆலோசகர்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பென்டகன் அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் ராணுவப் படை காஸா மீது விரைவில் தரைவழி தாக்குதலை கடுமையாக்கப்படுவதற்கு முன்னதாக பென்டகன் இராணுவ ஆலோசகர்களையும் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் இஸ்ரேலுக்கு அனுப்பவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

ராணுவ ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகளில் ஒருவராக மரைன் கார்ப்ஸ் லெப்டினன்ட் ஜெனரல் ஜேம்ஸ் க்ளின் இடம்பெற்றுள்ளார். இவர் முன்னர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சிறப்பு நடவடிக்கைப் படைகளை வழிநடத்த உதவியவராவார்.

ஈராக் போரின் போது அமெரிக்க படைகள் எதிர்கொண்ட மிக மோசமான சர்ச்சைக்குரிய போர்  ஒன்றான ஃபல்லுஜாவுடனான போரின் போது முக்கிய பொறுப்பிலிருந்து, போரை வழிநடத்தினார் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் படைக்கு, காஸா நகர் பகுதிகளில் தாக்குதலின்போது மக்களின் உயிரிழப்புகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்தும் க்ளின் ஆலோசனை வழங்குவார் என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

காஸாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஹமாஸ் அமைப்பு,  பல ஆண்டுகளாக சுரங்கப்பாதை வலையமைப்புகளை ஏற்படுத்தி, மிகப் பாதுகாப்பான வகையில் தாக்குதல்களை நடத்த தயாராக இருக்கும் நிலையில், இஸ்ரேல் ஒரு பெரிய அளவிலான தரைப்படை தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது.

இந்த நிலையில்தான், இஸ்ரேலுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில், கிளின் மற்றும் பிற இராணுவ அதிகாரிகள் இஸ்ரேல் நடத்தும் நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் அனுபவம் கொண்டவர்களாக இடம்பெற்றுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆலோசகர்கள் எந்த தாக்குதலிலும் ஈடுபட மாட்டார்கள் என்றும் நகர்ப்புறங்களில் நடக்கும் தாக்குதல்களின்போது பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைப்பதற்கான வழிகாட்டுதலை வழங்குவர் என்றும் அமெரிக்க அதிகாரி கூறினார்.


மேலும் இந்த வார இறுதியில், பென்டகன்  அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புப் படைகள் மற்றும் ஒரு டெர்மினல் ஹை ஆல்டிடியூட் பாதுகாப்புப் அமைப்பையும்  அனுப்புகிறது. அதே போல் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஐசனோவர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, இந்தக் கடற்படைக் கப்பல், இஸ்ரேலின் கரையில் ஒரு பாதுகாப்புக்காக நிறுத்தப்படும் என்றும், இதன் மூலம் இஸ்ரேலை கடற்வழியாக பாதுகாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.