
தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியர்களுக்காக அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைவானின் ஹூவாலியனில் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை காலை 7.58 மணியளவில் 7.4 ரிக்டா் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில், ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தெற்கு ஜப்பானிய தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தைபேவில் வசிக்கும் இந்தியர்களின் உதவிக்காக அவசர உதவி எண்ணை இந்தியா தைபே சங்கம் வெளியிட்டுள்ளது.
அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் 0905247909 என்ற எண்ணுக்கு அல்லது ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தியர்கள் அனைவரும் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கவனித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.