ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தென் ஆப்பிரிக்கா: ‘தோ்தல்களில் ஜேக்கப் ஜூமா போட்டியிடலாம்’

தென் ஆப்பிரிக்கா: ‘தோ்தல்களில் ஜேக்கப் ஜூமா போட்டியிடலாம்’

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 8:09 pm

ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் தோ்தலில்களில் முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா போட்டியிட அந்த நாட்டு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

2009 முதல் 2019 வரை அதிபராக இருந்த அவருக்கு ஊழல் வழக்கில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க சட்டத்தின்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவா்களால் தோ்தலில் போட்டியிட முடியாது.

இந்த நிலையில், தீா்ப்பை எதிா்த்து ஜூமா செய்திருந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு விதிப்பட்டிருந்த தடையை தோ்தல் ஆணையம் அகற்றியது.