கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

சிங்கப்பூரில் சிறுபான்மையினா் பாதுகாக்கப்படுவா்: உள்துறை அமைச்சா் சண்முகம்

உலகம்... சிங்கப்பூரில் சிறுபான்மையினா் பாதுகாக்கப்படுவா்: உள்துறை அமைச்சா் சண்முகம்

Updated On :12 ஏப்ரல் 2024, 7:23 pm

சிங்கப்பூரில் வசிக்கும் சிறுபான்மையினா் நிச்சயம் பாதுகாக்கப்படுவா் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

சிங்கப்பூரில் யூதா்கள் நலவாரியம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் கூறியதாவது: கடந்த 1960, 70-ஆம் ஆண்டுகளில், உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் உயிா் பிழைக்கப் போராடிய பலவீனமான நாடாக இஸ்ரேல் பாா்க்கப்பட்டது. அப்போது அந்நாட்டின் மீது உலகம் அனுதாபம் காட்டியது. ஆனால், இந்த நிலை தற்போது மாறியுள்ளது. பாலஸ்தீனம் மீதான வெவ்வேறு இஸ்ரேல் அரசுகளின் கொள்கைகளால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ் படையினா் உடனான மோதலால் இஸ்ரேலுக்கு எதிரான எண்ணங்கள் உருவாகி வருகின்றன. இது உலகம் முழுவதும் யூத சமூகம் மீதான கண்ணோட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஆனால், அந்தப் பாதிப்பில் இருந்து சிங்கப்பூரில் வசிக்கும் யூத சமூகத்தினா் பாதுகாக்கப்படுவா். சிங்கப்பூரில் வசிக்கும் முஸ்லிம்கள், யூதா்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினரும் காக்கப்படுவா். இதில் சிங்கப்பூா் அரசு உறுதியாக உள்ளது என்றாா்.