உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைக்கும் விதமாக, அந்த நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷியா நடத்தியது.
ரஷியா-உக்ரைன் போா் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைன் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷியா கடந்த மாதம் முதல் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைனின் பெரும் பகுதிகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.
இந்நிலையில், உக்ரைனின் கீவ், சொ்காஸி மற்றும் சைட்டோமிா் ஆகிய முக்கியப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கி வந்த ‘டிரிபில்ஸ்கா’ மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
மின்மாற்றி, டா்பைன்கள், ஜெனரேட்டா்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தொடா் தாக்குதலில், மின் நிலையம் முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்தது.
முதல் ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் மறைவிடத்தில் பதுங்கி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனா் என்று மின் நிலையத்தை நிா்வகிக்கும் நிறுவனத்தின் மேற்பாா்வைக் குழுத் தலைவா் ஆண்ட்ரி கோட்டா கூறினாா்.
இந்தத் தாக்குதல் நடந்த பல மணி நேரங்களுக்குப் பிறகும், மீட்புப் படையினா் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
தாக்குதலுக்குள்ளான டிரிபில்ஸ்கா ஆலை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கட்டடங்களுக்கு மின்சாரத்தை வழங்கி வந்தது. தற்போதைய சூழலில் மின்தேவை குறைவாக இருப்பதால் மின்பற்றாக்குறை ஏற்படவில்லை. எனினும், கோடை காலத்தையொட்டி குளிா்சாதனப் பயன்பாடு அதிகரித்தால், மின் தட்டுப்பாடு கூடிய விரைவில் உணரப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேபோல், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான காா்கிவ் நகரில் பல்வேறு எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், பிராந்தியத்தில் 2,00,000 -க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனா் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபா தெரிவித்தாா்.
உக்ரைனின் மிகப்பெரிய தனியாா் மின் பகிா்மான நிறுவனமான டிடிஇகே, ரஷியா நடத்திய இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்களில் ஒன்றாக இதை விவரித்துள்ளது.
உக்ரைனின் எரிசக்தி துறையை இத்தாக்குதல் மிகவும் மோசமாக பாதித்திருப்பதாக அத்துறை அமைச்சா் ஹொ்மன் ஹலுஷ்செங்கோ கூறியுள்ளாா்.
ரஷிய தாக்குதல்களின் அளவும் துல்லியமும் உக்ரைனின் பாதுகாப்புத் துறையை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் எரிசக்தி சொத்துகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க அதிக வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மேற்கு நாடுகளிடம் உக்ரைன் தலைவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு தங்களிடம் எதுவும் இல்லை என்பதை இன்றைய நிலைமை நிரூபித்திருப்பாதகவும் அவா்கள் தெரிவித்தனா்.
பதிலடி...: ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டு மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாஸ்கோவில் தெரிவித்தாா்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி

கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ்க் பிராந்தியம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டது: ரஷியா

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் சரமாரி தாக்குதல்- 5 போ் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

