மாலத்தீவு தோ்தல்: சீன ஆதரவு பெற்ற அதிபரின் கட்சி அமோக வெற்றி!

மாலத்தீவு தோ்தல்: சீன ஆதரவு பெற்ற அதிபரின் கட்சி அமோக வெற்றி!

மாலத்தீவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அதிபர் முகம்மது முயிசுவின் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உள்ளூா் நேரப்படி மாலை 5 மணி வரையில் 72.96 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தத் தோ்தலில் அதிபா் முகமது மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி), முக்கிய எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 368 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

அதன்படி, அதிபா் மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மூயிஸின் கூட்டணி கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றியது. அடுத்தபடியாக மாலத்தீவு ஜனநாயக கட்சி 15 இடங்களில் வென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிபராக யார் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே விரும்பிய சட்டங்களை கொண்டுவர முடியும்.

இந்த வெற்றியின் மூலம் மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தலில் மூயிஸின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில், மூயிஸின் பிஎன்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெறும் 8 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சீன ஆதரவாளராகக் கருதப்படும் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றாா்.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினார். இதனால் மாலத்தீவு, இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com