இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

ஹிஸ்புல்லாவின் பதிலடி: இஸ்ரேலிய ராணுவ தளம் மீது தாக்குதல்
லெபனான் தாக்குதலில் பலியான இஸ்ரேல் ராணுவ வீரரின் இரங்கல் நிகழ்வில் குடும்பத்தினர்
லெபனான் தாக்குதலில் பலியான இஸ்ரேல் ராணுவ வீரரின் இரங்கல் நிகழ்வில் குடும்பத்தினர்ஏபி

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதப் படை, இஸ்ரேலின் தெற்கு நகரமான ஆக்கருக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தைத் தாக்கியுள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், தங்கள் அமைப்பின் அதிகாரி ஒருவரை வான்வழி தாக்குதலில் கொன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு குறிப்பிட்டுல்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த ஹுசைன் அலி அஸ்குல் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இவர் ஹிஸ்புல்லாவின் வான்வழி தாக்குதல் படையில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருந்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

அட்லுன் பகுதியில் நடந்த தாக்குதலை லெபனான் அரசு செய்தி நிறுவனமும் பார்வையாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

அக்.7 போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் எல்லையில் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் உறுப்பினர்கள் இடையேயும் தொடர் மோதல் நடந்து வருகிறது.

சில நேரங்களில் இரு நாடுகளின் உள்புறம் வரை இந்த தாக்குதல் பரஸ்பரம் தொடர்கிறது.

அட்லுன் நகரில் இஸ்ரேலின் வெறிச்செயலுக்கு பதிலடியாக ஆகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திய இடம் எல்லைப் பகுதிக்கு 15 கிமீ தொலைவில் உள்புறப் பகுதியாக உள்ளது. போர் ஆரம்பித்தது முதல் இவ்வளவு உள்புறத் தொலைவில் தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை.

இஸ்ரேல் ராணுவம் வடக்கு கரையோரப் பகுதியில் ஹிஸ்புல்லாவின் இரண்டு வான்வழி தாக்குதல்களை வெற்றிகரமாக இடைமறித்து தகர்த்ததாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com