லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

லண்டனில் கத்தியுடன் பலரை வெட்டிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

லண்டனில் கத்தியுடன் பலரை வெட்டிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

லண்டன் நகரின் ஹைனால்ட் பகுதியில் இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் சாலைகளில் ஆக்ரோஷமாக வலம் வந்தார்.

பட்டப்பகலில் சாலைகளில் செல்பவர்களை நோக்கி கத்தியால் தாக்க முயன்றுள்ளார். இதில் பெண்கள், முதியவர்கள் உள்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக லண்டன் நகர பொதுச்செயலாளர் ஜேம்ஸ் கிளெவர்லி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் எந்த தீவிரவாத நோக்கத்துடனும் நடத்தப்பட்டது அல்ல எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!
ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

இது குறித்து பேசிய காவல் துறை துணை ஆணையர் அடலெகென், இது மிகவும் மோசமான ஒரு சம்பவம். இதனால் பலதரப்பட்ட மக்கள் அச்சமடைந்தனர் என்பதை உணர்கிறேன். மக்களுக்கு பொதுவெளியில் இதுபோன்று ஒரு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நினைத்துப்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

கத்தியுடன் பொதுமக்களை தாக்கிய இளைஞரை ஹைனால்ட் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் காவல் துறையினரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com