மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸில் உள்ள மின்டானோவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Updated On :3 ஆகஸ்ட் 2024, 6:02 am

மின்டனாவோ: பிலிப்பின்ஸில் உள்ள மின்டானோவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்ததாவது: பிலிப்பின்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூா் நேரப்படி காலை 9.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது.

10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அருகிலுள்ள பகுதிகளில் உணரப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால், அந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.