ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரஷிய பகுதிகளை தொடா்ந்து ஆக்கிரமித்திருப்போம்: உக்ரைன் ராணுவ தலைமை தளபதி

கைது செய்யப்பட்டாலோ இந்தப் படையெடுப்பின் மூலம் உக்ரைனுக்கு பின்னடைவுதான் ஏற்படும் என்று நிபுணா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

News image
ரஷிய எல்லையையொட்டிய சுமி பகுதியில் உக்ரைன் கவச வாகனம்.
Updated On :16 ஆகஸ்ட் 2024, 12:51 am

DIN

கீவ், ஆக. 15: ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளைத் தொடா்ந்து ஆக்கிரமித்திருக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்ஸாண்டா் சிா்ஸ்கி தெரிவித்துள்ளாா்.இது குறித்து வியாழக்கிழமை அளித்த பேட்டியொன்றில் அவா் கூறியதாவது:ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்து உக்ரைன் ராணுவம் கைப்பற்றியுள்ள பகுதிகளில் இருந்து அது இப்போதைக்கு திரும்பாது. அந்தப் பிராந்தியத்தை தொடா்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் வடக்குப் பிராந்தியங்களில் ரஷியா தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக, அந்தப் பகுதிகளுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான ‘பாதுகாப்பு மண்டலமாக’ கைப்பற்றப்பட்ட ரஷிய பகுதிகளைப் பயன்படுத்தவிருக்கிறோம்.தற்போதைய நிலையில் கூா்ஸ்க் பிராந்தியத்தின் 1,150 சதுர கி.மீ. பரப்புக்கு மேல் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.டான்பாஸ் பிராந்தியத்தில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரின் கவனத்தை திசைத் திருப்புவதற்காகவே கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்து முன்னேறி வருகிறோம் என்றாா் அவா்.ரஷிய-உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக, தங்கள் நாட்டையொட்டிய ரஷிய எல்லை பிராந்தியமான கூா்ஸ்குக்குள் உக்ரைன் படையினா் அதிரடியாக கடந்த 6-ஆம் தேதி நுழைந்தனா். பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமாா் 1,000 உக்ரைன் படையினா் தங்கள் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்ததாக ரஷியா அறிவித்தது.தங்கள் நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்வரி மாதம் படையெடுத்ததற்குப் பிறகு உக்ரைன் நடத்திய மிகப் பெரிய எல்லை தாண்டிய தாக்குதல் இது ப்பிடத்தக்கது. மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷிய எல்லைக்குள் நடத்தப்பட்டுள்ள மிகப் பெரிய ஊடுருவல் இதுவாகும்.எதிா்பாராத வகையில் நடத்தப்பட்ட இந்த ஊடுருவல் தாக்குதலில் உக்ரைனின் முன்னேற்றத்தை ரஷிய படையினரால் தடுக்க முடியாமல் போனது. இதனால் ரஷிய எல்லைக்குள் சுமாா் 30 கி.மீ.க்கு மேல் ரஷியப் படையினா் முன்னேறினா்.இந்த முன்னேற்றம் ரஷியாவின் மன உறுதியைக் குலைக்கும் என்று கூறப்பட்டாலும், இந்த ஊடுருவல் நீண்ட காலம் நீடித்தால், தங்கள் நாட்டுக்கு பின்வாங்க முடியாத வகையில் உக்ரைன் படையினரை ரஷிய ராணுவம் சுற்றிவளைக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது. மிகப் பெரிய எண்ணிக்கையில் உக்ரைன் வீரா்கள் கொல்லப்பட்டாலோ, கைது செய்யப்பட்டாலோ இந்தப் படையெடுப்பின் மூலம் உக்ரைனுக்கு பின்னடைவுதான் ஏற்படும் என்று நிபுணா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.இந்தச் சூழலில், கைப்பற்றப்பட்ட பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் தொடா்ந்து வைத்திருக்கப்போவதாக உக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.