தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மத்திய காஸாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு 17 பேர் பலி

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியானதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:21 am

DIN

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியானதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய காஸாவில் உள்ள ஜவேடாவில் சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

பலியானவர்களின் பெரும்பாலோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் எட்டு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்களும் அடங்குவர் என்று ஹமாஸ் நிர்வாகத்தில் உள்ள சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

மூன்று ஏவுகணைகள் அவர்களின் இடத்தை குறிவைத்தன. அப்போது அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர் என்று அவர் மேலும் கூறினார். அண்மையில் இப்பகுதியில் வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் அமைப்பினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.அதையடுத்து அந்த அமைப்பினரை முழுமையாக ஒழித்துக்கட்டப்போவதாகச் சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியில் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்தச் சூழலில், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஹமாஸிடம் எஞ்சியுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குமான ஒப்பந்த செயல்திட்டத்தை அமெரிக்கா கடந்த மே 31-ஆம் தேதி வெளியிட்டது. அந்த செயல்திட்டத்தை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இரண்டுமே ஏற்றுக்கொண்டன. இருந்தாலும் செயல்திட்டத்தில் சில திருத்தங்களை ஹமாஸ் அமைப்பினா் கோரியதால் ஒப்பந்தம் ஏற்படுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவாா்த்தையில் வேறுபாடுகள் களையப்பட்டுள்ளதாகவும் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படலாம் என்றும் மத்தியஸ்தா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.