அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் இஸ்ரேல் உடனான உறவைப் பாதிக்காது என இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார்.
சூரிய மின்சக்தி திட்ட ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதானி குழுமம், “சட்ட விதிமுறைகளை பின்பற்றியே அதானி குழுமம் செயல்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதானி குழுமம் ஆலோசித்து வருகிறது” என்று தெரிவித்தனர்.
மேலும், ”இதுபோன்ற சவால்களை அதானி குழுமம் சந்திப்பது இது முதல்முறையல்ல. இத்தகைய தாக்குதல்கள் அதானி குழுமத்தை வலுப்படுத்தவே செய்கின்றன” என அதானி தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி
இது அதானி குழுமம் இஸ்ரேலில் செய்துள்ள முதலீடுகளைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த இஸ்ரேல் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத், “அது எங்கள் பிரச்னை கிடையாது. இஸ்ரேலில் நடப்பதை அந்தப் பிரச்னை பாதிக்காது. இதனால் அதானி குழுமத்துடனான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்படாது.
இஸ்ரேல் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இடமாக இருக்கிறது. உலகச் சந்தைக்கு ஏற்ற விஷயங்களில் நாங்கள் சிறந்து விளங்குகிறோம். எங்களிடம் மேம்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நெருங்கிய உறவானது இரு அரசுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவாகும். இந்தியா பரந்த யோசனைகளை நிகழ்த்திப் பார்ப்பதற்கும் உலகம் முழுவதும் செல்வாக்கு செலுத்துவதற்கும் ஒரு சூழலை உருவாக்கி வைத்துள்ளது. இந்தியா சரியான பாதையில் செல்கிறது” என்றார்.
ஹமாஸ் தாக்குதல் நினைவு நாள் அன்று பிரதமர் மோடி அழைத்துப் பேசியது குறித்து தெரிவித்த அவர், ”கடந்த அக்டோபர் 7 அன்று முதல் அழைப்பு பிரதமர் மோடியிடம் இருந்து வந்தது. இஸ்ரேலியர்கள் அதை மதிக்கிறோம். இந்திய அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல இது ஒரு வாய்ப்பு. இக்கட்டான நேரத்தில் எங்களுடன் நிற்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவைப் பற்றி எங்களுக்கு நீண்ட காலமாக நல்ல புரிதலே உள்ளது" என்று கூறினார்.
அதானி குழுமம் வடக்கு இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தில் 70% பங்குகளை வைத்துள்ளது. மேலும், இஸ்ரேலுடன் இணைந்து ராணுவ டிரோன்கள் தயாரிப்பு மற்றும் செமிகண்டக்டர்கள் தயாரிப்பிலும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து

கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

அணுசக்தித் துறையில் அதானி குழுமம் : புதிய நிறுவனம் தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

