காஸாவில் 27 ஆயிரத்தைத் தாண்டிய பாலஸ்தீனர்கள் பலி!

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்தாண்டு அக்.7 ஹமாஸின் அத்துமீறலைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸா மீது நடத்திவரும் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 190 பேர் காயமகாயமடைந்ததாகவும் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல்-ஹாமஸ் மோதல் வெடித்ததிலிருந்து இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 27,019 ஆகவும், காயமடைந்த பாலஸதீனியர்கள் 66,139 ஆகவும் உயர்ந்துள்ளது. 

படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
 
இஸ்ரேலியப் படைகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தற்காப்புக் குழுவினரை அணுகுவதைத் தடுப்பதால், இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், அல்-அமல் மருத்துவமனை மற்றும் தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு அருகாமையில் இஸ்ரேல்  நடத்திய தாக்குதல்கள் தொடர்ச்சியாக 11வது நாளாகத் தொடர்ந்ததாக அதிகாரப்பூர்வ பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com