சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸா மக்கள் காற்றிலா கரைந்து போவார்கள்? : இஸ்ரேலை எச்சரிக்கும் உலக நாடுகள்

காஸாவின் தெற்கு எல்லையான ராபா நோக்கிய இஸ்ரேலின் போர் நகர்வு குறித்து உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

News image
தாக்குதலில் காயமுற்ற சிறுமி | AP
Updated On :11 பிப்ரவரி 2024, 9:13 am

DIN

காஸாவின் தெற்கு எல்லையான ராபாவில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை விரிவுப்படுத்தவுள்ள இஸ்ரேலின் முடிவு, பேரழிவையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என அண்டை நாடுகள் மற்றும் மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் இஸ்ரேலை எச்சரித்துள்ளன.

ராபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட சமீபத்திய வான்வழி தாக்குதலில் 44 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவம் தரைவழி தாக்குதலை ராபா நோக்கி விரிவுபடுத்த அங்குள்ள மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தகர்க்கப்பட்ட கட்டடங்கள்  | AP

தகர்க்கப்பட்ட கட்டடங்கள்  | AP

முன்னர் காஸாவின் மற்ற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். ராபாவில் 80 சதவிகித மக்கள் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் இஸ்ரேலின் இந்த முடிவு மக்கள் அடுத்து எங்கு செல்வது என்கிற கேள்வியை எழுப்பியது.

எகிப்தின் எல்லை பகுதியான ராபாவிலிருந்து மக்களை இடம்பெயர கோரினால் எகிப்து நோக்கி அவர்கள் இடம்பெயரும் வாய்ப்பு உள்ளது. இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் 40 ஆண்டுகளாக இஸ்ரேல்-எகிப்து இடையே நிலவிவரும் உடன்படிக்கையை மீறும் செயல் எனவும் எகிப்து தெரிவித்துள்ளது.

தகர்க்கப்பட்ட கட்டடங்கள் மத்தியில் பாலஸ்தீனர்கள்  | AP

தகர்க்கப்பட்ட கட்டடங்கள் மத்தியில் பாலஸ்தீனர்கள்  | AP

ஜெர்மனியின் வெளியுறவு துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக்,  “காஸா மக்கள் காற்றில் கரைந்து போகமாட்டார்கள். ராபாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மனித பேரழிவை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

கத்தார், செளதி அரேபியா ஆகிய நாடுகளும் இஸ்ரேலை இது குறித்து எச்சரித்த நிலையில் மக்கள் எங்கு செல்வார்கள் என்கிற கேள்விக்கு நெதன்யாகு பதிலளித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு,  “ராபாவின் வடக்கு பகுதியில் நாங்கள் துப்புரவு செய்த இடங்கள் ஏராளமாக உள்ளன. விரிவான திட்டத்திற்கு செயலாற்றி கொண்டிருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

காஸாவில் பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ராபாவில் நாள்தோறும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.