சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கால வரையறையின்றி மின்வெட்டு, சாலைகள் முடக்கம்: பாக். மக்கள் போராட்டம்

பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர் மின்வெட்டினை எதிர்கொண்டு வருகிறார்கள்.

News image
பலுசிஸ்தான் போராட்டத்தில் பங்கேற்றோர்- ANI
Updated On :16 பிப்ரவரி 2024, 10:49 am

DIN

பிரதான சாலைகள் அறிவிப்பில்லாமல் மூடப்படுதல், நேர வரையறையின்றி மின்சாரம் தடை செய்யப்படுதல் ஆகியவற்றை எதிர்த்து பலுசிஸ்தான் கரன் மற்றும் பாஸ்னி பகுதிகளில் மக்கள் பெரும்திரளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோஷ்ன் பகுதியைச் சேர்ந்த மக்களும், மாணவர்களும் உதவி ஆணையருக்கு, தேர்தல் நேரத்தில் மூடப்பட்ட சாலைகளைத் திறக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களாக மூடப்பட்டிருந்த சாலைகள் இன்னமும் அப்படியே தொடர்வதால் மக்கள் இடையூறுகளை எதிர்கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பலுசிஸ்தான் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் மக்கள் 12 முதல் 18 மணி நேரம் மின்வெட்டை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பலுசிஸ்தான் மட்டுமில்லாமல் கில்கித் பால்டிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு நேர வரையின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் நாளுக்கு நாள் இந்த பிரச்னை அதிகரித்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.