

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் பலியானார்கள்.
பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் நிலப்பிரச்னை காரணமாக அம்புலின் மற்றும் சிகின் பழங்குடியினர் இடையே நேற்று மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தின்போது இருத்தரப்பினரும் ஏகே47 உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 64 பேர் பலியானார்கள். திங்கள்கிழமை காலை வபெனமண்டாவின் சாலையோரம், புல்வெளிகள் மற்றும் மலைகளில் 64 உடல்களின் கொடூரமான தடயங்களை விட்டுச் சென்றதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் காவல்துறையின் மூத்த அதிகாரியான ஜார்ஜ் ககாஸ் கூறுகையில், எங்காவில் இதுவரை நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய கொலை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரத்தக்களரியை வெளிப்படுத்தியுள்ளனர். முந்தைய மோதல்களை மிஞ்சியுள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.