காஸா படுகொலைக்கு அமெரிக்கா பச்சை கொடி காட்டுகிறது: சீனா விமர்சனம்

அமெரிக்க வீட்டோவால் காஸா போர் நிறுத்தத்திற்கு தடை: சீனா கண்டனம்
லெபனான் எல்லையில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட இஸ்ரேலிய வீரர்கள்
லெபனான் எல்லையில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட இஸ்ரேலிய வீரர்கள்Ariel Schalit

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது.

சீனா, அமெரிக்காவின் இந்த முடிவு கடும் ஏமாற்றம் அளிப்பதாக விமர்சித்துள்ளது.

இது குறித்து சீனாவின் ஐநா தூதுவர் ஜாங் ஜுன், “அமெரிக்காவின் வீட்டோ கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளிக்கிறது. அமெரிக்கா தவறான செய்தியை அளிக்கிறது. காஸாவை மேலும் ஆபத்துக்குள் தள்ளும் முடிவு இது. போர் நிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் படுகொலைக்கு பச்சை கொடி காட்டுவதிலிருந்து வேறுபட்டதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 13 நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த போது அமெரிக்காவின் வீட்டோ தலையீட்டால் தீர்மானம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

லெபனான் எல்லையில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட இஸ்ரேலிய வீரர்கள்
நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்: காஸா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com